நாளை முதல் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் `ரா மச்சா மச்சா’பாடல் | ``Raa Macha Macha'' song from the movie Game Changer from tomorrow

  மாலை மலர்
நாளை முதல் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் `ரா மச்சா மச்சா’பாடல் | ``Raa Macha Macha song from the movie Game Changer from tomorrow

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான `ரா மச்சா மச்சா' பாடலின் ப்ரோமோ வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் நாளை வெளியாகவுள்ளது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை